வடக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பலத்த மழை குறித்த எச்சரிக்கை!

editor 2

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். ஓரளவு கனமழை மற்ற இடங்களில் சில இடங்களில் 50மிமீக்கு மேல் இருக்கலாம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவாவில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share This Article