மயிலத்தமடு – மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்கள் அங்கு முன்னர், வசித்து வந்தமைக்கான ஆதாரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலத்தமடு – மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பு தொடர்பில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,
குறித்த வழக்கு இன்றைய தினம் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
1962ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரையில் குறித்த பகுதியில் 13 குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் யுத்தம் காரணமாக அவர்கள் அங்கிருந்து பின்னர் வெளியேறியதாகவும் குடியேற்றவாசிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் அவர்கள் அங்கு தங்கியிருந்தமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் சட்டத்தரணிகள் மன்றுரைத்துள்ளனர்.
இந்தநிலையில், எதிர்வரும் ஒரு வார காலத்துக்குள் அவர்கள் அங்கு தங்கியிருந்தமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.