வட மாகாணம் தழுவியதாக இன்று காலை 8.00 மணி முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பருத்திதுறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியிருந்தனர்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடாளாவிய ரீதியாக முன்னெடுத்து வரும் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிகப்பு போராட்டத்தை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை வடமாகாணத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டனர்.
இதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று காலை 9.30 மணிக்கு வைத்தியசாலை பிரதான வாயில் பகுதியில் ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது வைத்தியர்களது கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வைத்தியசாலைக்கு வருகைதந்த பொதுமக்களுக்கு வைத்தியர்களால் விநியோகிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் 2மணியுடன் போராட்டம் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.