இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார்.
பலாலி விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கலாசார மண்டபத்திற்கு வருகைதந்தார்.
அங்கு வடக்கு மாகாணத்தில் மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புத்தாக்க கண்காட்சி நடைபெற்றிருந்தது.
கண்காட்சியினைப் பார்வையிட்ட அவர் பின்னர்,
யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுநூலகத்திற்குச் சென்று அங்கு அறிஞர்களின் உருவச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்தார்.
பின்னர் அவருக்கு யாழ்.மாநகர ஆணையாளரால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
நிகழ்வுகளில் இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் கோபால் பாக்லே, வடக்கு ஆளுநர் சார்ளஸ் நிர்மலநாதன், யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலன் உட்பட்டவர்களும் அரச அதிகாரிகளும் பங்குகொண்டிருந்தனர்.