இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு வருகிறார்.
நாளைமறுதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும் அவர், சில ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றிவிட்டு அன்று மாலை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்
தில் இருந்து அலையன்ஸ் எயார் விமானம் ஊடாக சென்னை திரும்புகிறார்.
நாளை காலை கொழும்புக்கு வரும் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
அதேபோன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யும் இந்திய நிதி அமைச்சர் அங்கு ஸ்ரேட் பாங் ஒவ் இந்தியா கிளையொன்றையும் திறந்துவைக்கவுள்ளார்.
அன்றைய தினம் மாலை கொழும்பில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மலையகம் 200’ நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார்.
இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளையும் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பார் எனவும் அறிய முடிகிறது.
அதன் பின்னர் நாளை மறுதினம் வியாழக்கிழமை அவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலம் வருகை தருகிறார். அன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவுள்ளஅவர், அதன் பின்னர் வஸ்ரேட் பாங்
ஒவ் இந்தியா கிளையை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கிறார்.
அதனையடுத்து யாழ். கலாசார மையத்துக்கு பயணம் செய்யும் அவர், அங்கு ஒரு நிகழ்வில் பங்கேற்கிறார். அதன் பின் யாழ். பொது நூலகத்துக்கு சென்றுஅதனைப் பார்வையிடுவார்.
இதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து
அலையன்ஸ் எயார் விமானம் ஊடாக சென்னைக்கு திரும்புகிறார்.
இந்திய நிதி அமைச்சர் தமது இலங்கை விஜயத்தில் திருகோணமலையில் இந்தியா முன்னெடுத்துவரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆய்வுகளை நடத்த உள்ளது
டன், எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ள முதலீட்டுத் திட்டங்கள் குறித்தும்
கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
இம்மாதம் 2ஆம் திகதி இந்திய பாதுகாப்பு அமைச்சர் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவிருந்த நிலையில்,
திடீரென அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது. குறித்த பயணம் ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட இந்தியா மறுத்துவிட்டது.
என்றாலும், சீன கப்பல் விவகாரத்தில் இலங்கை காத்துவந்த மௌனமே ராஜ்நாத் சிங்கின் பயணம் ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
‘ஐயோரா’ (Indian Ocean RimAssociation) என கூறப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த 11ஆம் திகதி
இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டதலைவர்களுடன் முக்கிய கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தார்.
எஸ்.ஜெய்சங்கர் தமது இலங்கை விஜயத்தில் திருகோணமலைக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார். என்றாலும், இறுதி தருணத்தில் அவரது நிழ்ச்சி நிரல்மாற்றப்பட்டது.
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துகளை வெளிட்டதால் கடும் பாதுகாப்புடன் எஸ்.ஜெய்சங்கர் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இவ்வாறான பின்புலத்திலேயே இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளஉள்ளார்.
இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் இந்த விஜயம் தீர்மானமிக்கதாக அமையும் என இந்திய பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.