பூசா சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனையின் போது கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
பழைய பூசா சிறைச்சாலையின் ‘ஏ’ மற்றும் ‘டி’ வார்டுகளில் நேற்று (28) பிற்பகல் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு சிம் அட்டைகள், வெளிப்புற அட்டை அகற்றப்பட்ட இரண்டு தொலைபேசி சார்ஜர்கள் ஆகியவற்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றினர்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த தொலைபேசிகள் மற்றும் சாதனங்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.