இளம் குடும்பப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு – நீரா விப்பிட்டி கிராமத்தி லேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த கீதா (வயது -23) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,
அண்மையில் திருமண வாழ்வில் இணைந்த இவர்கள் முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கில் வீடு ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தனர். கொல்லப்பட்ட பெண தனது தாயாருடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்களாக அவர் தொலைபேசியில் தொடர்பு கொள்ளாத நிலையில் பெண்ணின் தாயார் அவர்கள் தங்கி யிருந்த வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு எவரும் இல்லாத நிலையில் சந்தேகம டைந்த தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டின் மலசலகூட குழியருகே குழி வெட்டப்பட்டு புதைக் கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இதையடுத்து சந்தேகத்தின் அடிப்ப டையில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார். இவர், முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்தவர்.
சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த. பிரதீபன் நேரில் சென்று விசாரணைகளை கண்கா ணித்தார். பொலிஸார் மேலதிக விசாரணை களை தொடர்ந்து வருகின்றனர்.