மட். மைக்கல் கல்லூரி மாணவர்கள் பாக்குநீரிணையைக் கடந்து சாதனை நிகழ்த்தினர்!

editor 2

தலைமன்னார் – இராமேஸ்வரத்திற்கு இடையில் உள்ள பாக்குநீரிணையை மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மூவர் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தனுக்கோடி கரைக்குச் சென்ற மாணவர்கள் மூவரும் நேற்று அதிகாலை 3 மணியளவில் தமது சாதனை நீச்சலைத் தொடங்கினர்.

நேற்று பிற்பகல் ஒரு மணி அளவில் அவர்கள் கரையை அடைந்தனர்.

இந்தச் சாதனை மாணவர்களை மன்னார் ரோட்டரிக் கழக உறுப்பினர்கள் உட்பட்டோர் வரவேற்றனர்.

புனித மைக்கல் கல்லூரி சாரணர்களின் 150 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், 15 வயதுக்குட்பட்ட ஒரு மாணவரும் பாக்குநீரிணையைக் கடந்து சாதனை படைத்தனர்.

Share This Article