வடக்கு – கிழக்கு கர்த்தால்; முழுமை பெறாமல் நடைபெறுகிறது!

editor 2

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வடக்கு – கிழக்கு அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட கர்த்தால் போராட்டம் முழுமை பெறாது நடைபெற்றுவருகிறது.

கடந்த வாரம் கர்த்தால் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக இந்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இருந்தபோதிலும்,

வடக்கு – கிழக்கில் இன்று தவணைப்பரீட்சை நடைபெற்றமையால் அனைத்துப் பாடசாலைகளும் வழமை போல செயற்பட்டன.

அதேவேளை, அரச பேருந்துகளும் போக்குவரத்தில் ஈடுபட்டன.

முக்கிய நகர்களின் வர்த்தக நிலையங்களில் கணிசமானவை திறக்கப்பட்டிருக்கவில்லை. சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

மக்களில் பலர் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

வடக்கு – கிழக்கு போராட்டத்திற்கு அம்பாறை மாவட்டம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அம்பாறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டு மொத்தத்தில் கடந்தகாலங்களில் நடைபெறும் கதவடைப்பு போல இன்று நடைபெற்றிருக்கவில்லை என்று பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This Article