பூநகரியில் வெடிபொருட்கள் மீட்பு!

editor 2

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார் குண்டுகள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் 60MM குண்டுகள் 08, 04MM 01, குண்டு ஒன்று, கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் இன்று புதன்கிழமை சிறப்பு அதிரடிப்படையினரால் குறித்த வெடி பொருட்கள் செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share This Article