யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது.
இதன் போது ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடை இரு பிள்ளைகளின் தாயாரான அ.கார்த்திகா என்ற இளம் தாய் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்,
நேற்று இரவு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில், கணவன் மனைவியை தடியினால் தாக்கியதில் படுகாயமடைந்து மயங்கமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த உயிரழப்புத் தொடர்பில் கணவன் தலைமறைவாகியிருந்த போது சாவகச்சேரி பொலிஸாரால் சந்தேகநபர் காலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.