‘இலங்கையில் எந்தவோர் இடமும் தமிழர்களுக்கு சொந்தம் அல்ல. ஆனால், நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். இதனை சர்வதேச சமூகம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.’ – இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
‘இலங்கையில் இனப்பிரச்னை என்று ஒன்றும் இல்லை. இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள்தான் அரசியல் பிழைப்புக்காக இனப்பிரச்னை
நிலவுகின்றது என்றும் தீர்வு வேண்டும் எனவும் கூக்குரல் இடுகின்றனர்.
இலங்கையில் எந்தவோர் இடமும் தமிழர்களுக்கு சொந்தம் அல்ல. ஆனால், நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். இதனை சர்வதேச சமூகம் கவனத்
தில்கொண்டு செயல்பட வேண்டும்.
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது என்று செய்திகள் உலாவுகின்றன. இந்தப் பிரேரணைகள், தீர்மானங்கள் எதற்கு? நாட்டின் இறையாண்மையை மீறிய இப்படியான செயல்பாடு
கள்தான் இலங்கையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இன மோதலுக்கு வழி வகுக்கும்.
எனவே, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றும் வெளிநாடுகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளின் சொல்லைக் கேட்டு வெளிநாடுகளும், சர்வதேச அமைப்புகளும் செயல்படக்கூடாது.’ – என்றார்.