ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக வீசா அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி பெறப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.