தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவருமான பொன்.செல்வராசா மட்டக்களப்பில் இன்று காலமானார்.
தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரான அவர், தற்போது நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முந்தைய அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன் செல்வராசா சுகவீனம் காரணமாகவே காலமானார் என்று தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.