இந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2 ஆயிரத்து 888 பரீட்சை மத்திய நிலையங்களில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படவுள்ளது.
இதன்படி, பரீட்சை நிறைவடையும் வரை பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.