கருணா வெளியேற்றத்தில் முக்கிய பங்குவகித்த மௌலானா எம்பியானார்! (காணொளி)

editor 2

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) வெளியேறுவதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் வர்த்தமானியில் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

கருணா வெளியேறுவதற்கு தன்னாலான ஆதரவை முழுமையாகக் கொடுத்ததாக அலிஸாஹிர் மௌலானா 03 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article