யாழ்ப்பாணம் காரைதீவு, காரைநகர் என பெயர் மாற்றப்பட்டு நூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, காரைநகர் அபிவிருத்தி சபையினரின் ஏற்பாட்டில் நூற்றாண்டு விழா நிகழ்வு நேற்றையதினம் (24) காரைநகர் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க, பொம்மலாட்டத்துடன் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வானது ஆரம்பமானது. இதன்போது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. பின்னர் காரைநகரில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
காரைநகர் அபிவிருத்தி சபையின் தலைவர் திரு.கம்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சா.சுதர்ஷன் கலந்து சிறப்பித்ததுடன், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு.பாலச்சந்திரன், சமூகமட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் , மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.













