ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியில் இந்திய அணி 6.1 ஓவர்களுக்குள் விக்கெட் இழப்பின்றி 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.
இன்றைய இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த நிலையில், மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் காணப்பட்ட நிலையில் போட்டி 3.40 க்கு ஆரம்பமானது.
இதன்படி இலங்கை அணி 15.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
போட்டி ஆரம்பம் முதல் இந்திய பந்துவீச்சாளர்களில் ஆதிக்கத்தால் இலங்கை வீரர்கள் தடுமாற்றத்துடன் விளையாடி வந்தனர்.
அதன்படி இலங்கை அணி 0.3 ஓவர்கள் நிறைவில் ஒரு ஓட்டத்திற்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
இந்திய அணி வீரர் பும்ராவின் பந்து வீச்சில் இலங்கை அணி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் பெரஹெர இரண்டு பந்துகளுக்கு ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
இரண்டு ஓவர்களில் நிறைவில் இலங்கை அணி எட்டு ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஷங்க நான்கு பந்துகளில் இரண்டு ஓட்டங்களை மாத்திரம் பெற்று சிராஜின் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இலங்கை அணியின் நான்காவது வீரராக களமிறங்கிய சதீர சமரவிக்ரம இரண்டு பந்துகளில் சிராஜின் பந்துவீச்சில் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
மொஹமட் சிராஜ் வீசிய நான்காவது ஓவரில் மட்டும் இலங்கை அணி நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதற்கமைய பத்தும் நிஷங்க இரண்டு ஓட்டங்களுடனும் தனஞ்சய டீ சில்வா நான்கு ஓட்டங்களுடனும்சதீர சமரவிக்ரம மற்றும் சரித்த அசலாங்க ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.
அதற்கமைய இலங்கை அணி 5.5 ஓவர்களில் நிறைவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 12 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து ஓட்டங்கள் எதுவும் பெறாமல் இலங்கை அணி தலைவர் தசுன் ஷானக இந்திய அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் சிராஜின் பந்தில் ஆட்டமிழந்தார்.
17 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் குசஸ் மென்டிஸ், மொஹமட் சிராஜ் வீசிய பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
ஹர்த்திக் பாண்டியா வீசிய பந்து வீச்சில் துனித் வெல்லாலகே ஆட்டமிழந்துள்ளார்.
இதன்படி, இலங்கை அணி 12.3 ஓவர்களில் 40 ஓட்டங்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய அணி சார்பில் மொஹமட் சிராஜ் ஆறு விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இதன்படி ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ள நிலையில் 51 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் சுப்மன்கில் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி 3.1ஓவர்களில் 51 ஓட்டங்களைப் பெற்று 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.