கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தப் பணிகள் மீண்டும் ஒரோபார் மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் ஈடுபட்டு வந்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட வேறு பணிகளுக்கு செல்லவிருப்பதால், குறித்த மனிதப்புதை குழி அகழ்வுப் பணிகள் இவ்வாறு தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்படுகின்றன என்று முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.