கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தில் கடந்த 9 நாட்களாக தொடர்ந்த அகழ்வில் 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டன.
கடந்த 6ஆம் திகதி ஆரம்பமான அகழ்வு பணியில் 9ஆவது நாளான நேற்று 3 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. தடயப் பொருளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் இலக்கத்தகடு ஒன்றும் ஆடைகளும் இலக்கங்கள் காணப்பட்டன.
இந் நிலையில் இதுவரை ஒன்பது நாட்கள இடம்பெற்ற அகழ்வாய்வுகளின் முடிவுகள் தொடர்பில் தாம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அதன் பின்னர் குறித்த அகழ்வாய்வுகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கினால் தாம் தொடர்ந்தும் அகழ்வாய்வுகளை மேற் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அகழ்வாய்வில் ஈடுபட்ட தொல்லியல்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அகழ்வு பணிகள் இடம்பெற்ற 9 நாட்களிலுமாக 17 எலும்புகூடு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.