நல்லூரான் மாடு இடித்ததில் ஆலய பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இருபாலை பகுதியை சேர்ந்த நித்தியசிங்கம் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய நந்தவனத்தில் பணியாற்றும் பணியாளர் நேற்று வியாழக்கிழமை (14) மாலை நந்தவனத்தில் வளர்க்கப்படும் மாட்டிற்கு உணவளிக்க சென்ற சமயம் மாடு அவரை இடித்துள்ளது.
மாடு இடித்ததில் காயமடைந்தவரை அங்கிருந்து மீட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.