ஆசாத் மௌலானாவின் தந்தை விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர் என்கிறது ஐலண்ட்!

editor 2

1990 ம் ஆண்டு சென்னையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக்குதலில் கொல்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களில் சனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவின் தந்தையும் ஒருவர் என நன்கு தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் கொல்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களில் முகமட் மிஹ்லர் முகமட் ஹன்சீரும் ஒருவர் என ஐலண்ட் தெரிவித்துள்ளது.

1999 ம்ஆண்டு ஜூன்19 ம்திகதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தொடர்மாடியில் உள்ள வீடொன்றில் ஈபிஆர்எல்எவ்வின் கூட்டம் நடந்துகொண்டிருந்தவேளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக்குதல் காரணமாக அவரது தந்தை கொல்லபபடும்போது ஹன்சீருக்கு 8 வயது என ஐலண்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபையை ஈபிஆர்எல்எவ் ஆட்சிசெய்தவேளை முகமட் மிஹ்லரிற்கு ஈபிஆர்எல்எவ் அமைப்புடன் தொடர்பிருந்ததை விடயமறிந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன என ஐலண்ட் தெரிவித்துள்ளது.

ஆசாத் மௌலானாவிற்கு சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் உள்ள தொடர்பை இந்தியாவில் பயிற்றுவிக்கப்பட்டு இலங்கையில் செயற்பட்ட தமிழ் குழுக்களின்பின்னணியை அடிப்படையாக வைத்தே ஆராயவேண்டும் என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் 1990 இல் இந்திய அமைதிப்படையினர் விலகியதை தொடர்ந்து புதுடில்லியின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்ட வரதராஜபெருமாள் அரசாங்கத்தின் நிர்வாகம் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து ஈபிஆர்எல்எவ்அமைப்பினது தலைவர்களும் உறுப்பினர்களும் பெருமளவில் இந்தியாவில் தஞ்சமடைந்ததையும் விடயமறிந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது குறித்து முழுமையான விசாரணைகள் அவசியம் என முன்னாள் தூதுவரும் சனல் 4 இல் கருத்து தெரிவித்தவருமான சரத்கொங்காக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பயங்கரமான கடந்தகாலங்களில் இருந்து எங்களால் மீளமுடியாமல் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article