இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று(13) காலை மீன் பிடிக்க புறப்பட்டு நெடூந்தீவு படற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இராமேஸ்வரத்தை சேர்ந்த மூன்று படகையும் அதிலிருந்து 19 மீனவர்களை நேற்று(13) கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இரு இழுவைப்படகும்,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேரந்த ஒரு படகும் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து வருகின்ற நடவடிக்கையினை மேற்கண்டுள்ளனர்.
கடற்ப்படையினர் இம் மீனவர்களை யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் இன்று(14) ஒப்படைக்கப்படுவர். நீரியல்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை ஊற்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளனர்.