மல்லாகம் நீதிமன்றிலிருந்த 50 கிலோ கஞ்சா திருடப்பட்டது!

editor 2

மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருளான 50 கிலோ கஞ்சா களவு போயுள்ளது என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் 50 கிலோ கஞ்சா களவாடப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சான்று பொருளே இவ்வாறு காணாமல் போயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Share This Article