சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிரான அவநம்பிக்கை பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கட்டுள்ளது
பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகளும், பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நாட்டில் சுகாதாரத் துறையின் வீழ்ச்சி, தரமற்ற மருந்து இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி சுகாதார அமைச்சருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையை முன்வைத்திருந்தது.
இதனடிப்படையில் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் குறித்த பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், இன்று மாலை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
பிரேரணையை எதிர்த்து, ஆளும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதற்கமைய, 40 மேலதிக வாக்குகளால் சுகாதார அமைச்சருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.