சர்வதேச விசாரணைக்கு தயார் என்கிறார் நீதியமைச்சர்!

editor 2

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விசாரணையானது சர்வதேச விசாரணையாக இருக்கும் எனவும், உள்நாட்டு விசாரணையாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் போது, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ‘செனல் 4’ வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பில், சந்தேகம் உள்ளதாக அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்

இதன்படி, பிரித்தானிய தொலைக்காட்சி அலைவரிசை, புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவானது எனவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்

இந்த கூற்றுக்கள் இருந்தபோதிலும், ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்

Share This Article