மத வழிபாட்டுத்தலங்களை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்கிறார் ஜனாதிபதி!

editor 2

நாட்டின் மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வடக்கு-கிழக்கில் மத ரீதியிலான பிரச்னைகளைக் கண்டறிவதற்கு மாகாண மட்டத்தில் மதத் தலைவர்கள் தலைமையிலான குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை கூறினார்.

Share This Article