வடக்கு நீதிமன்றங்கள் முடங்கின! சட்டத்தரணிகள் போராட்டம்!

editor 2

சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 22.08.2023 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் நாளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும் குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This Article