குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 53 வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் ஒரு ஆண் வீட்டுப்பணியாளர் உள்ளடங்கலாக 54 பேர் இன்று புதன்கிழமை (16) காலை நாட்டை வந்தடைந்தனர்.
அவர்கள் நாடு திரும்புவதற்கு குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அநுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்கள்.
அவர்கள் தாங்கள் முன்னர் பணிபுரிய இணங்கிய இடங்களில் இருந்து வெளியேறி அதிக சம்பளத்திற்கு வேலைபார்க்கவேண்டிய நிலைக்குதள்ளப்பட்டனர். இந்நிலையில், நோய், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் விசா காலாவதியானமை ஆகிய காரணங்களால் அவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அவர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவர்கள் தங்கள் பிரதேசங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து செலவுகளை வழங்கியுள்ளது.