யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூன்று நூல்கள் இன்று (9) வெளியிட்டு வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எழுதிய காலநிலை மாற்றம், அனர்த்த முகாமைத்துவம் , HydroClimate of Northern Sri Lanka ஆகிய மூன்று நூல்களும் இன்று (9) வெளியிட்டு வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளையும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், புவியியற்றுறை முன்னாள் தலைவர் பேராசிரியர் கா.குகபாலன், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் வடக்கு மாகாணத்தின் பிராந்திய முகாமையாளர், பொறியியலாளர் ஏ.ஜெகதீசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.