நாடாளுமன்றத்தில் பணிபுரியும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்!

editor 2

நாடாளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

பராமரிப்புத் துறையில் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தமக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, குறித்த பெண்களிடம் எந்தவொரு பாலியல் துன்புறுத்தலும் நடக்கவில்லை என்று கடிதங்கள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் மேற்பார்வையில் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினால் விசாரணை நடத்தப்படும் என ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணைக் குழு நேற்று (07) முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.

Share This Article