திருகோணமலை சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற விமானவிபத்தின் போது உயிரிழந்த விமானி 2012 இல் பாரிய விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற விபத்தி;ல் சிக்கி உயிரிழந்த பிடி- 6 பயிற்சி விமானத்தின் விமானி தரிந்து ஹேரத் 2012 இல் தும்மசூலரிய என்ற இடத்தில் இடத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார்.
2012 பெப்ரவரி 13ம் திகதி அவரது மிக் 27 போர் விமானம் தென்னந்தோப்பில் விபத்துக்குள்ளானவேளை இவர் பரசூட்டை பயன்படுத்தி விமானத்திலிருந்து தப்பித்தார்
பயிற்சியின்போதே இந்த விபத்தும் இடம்பெற்றது.
குருநாகல்மலியதேவ கல்லூரியின் மாணவனானஇவர் 2006 இல் இலங்கை விமானப்படையில் இணைந்தார் என்று விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.