அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
நாளைமறுதினம் புதன்கிழமையே அவரின் உரை இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாட்டை ஜனாதிபதி நடத்தியிருந்தார். கட்சிகளின் யோசனைகளை முன்வைப்பதற்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே 13 இன் அடுத்த கட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஜனாதிபதி நாளைமறுதினம் உரையாற்றவுள்ளார் எனத் தெரியவருகின்றது.