2024ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளை குறைத்து வருடத்தில் ஒருமுறை மாத்திரம் பரீட்சையை நடத்த ஆலோசிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பாடத் தொகுதியின் முடிவிலும் மதிப்பீடு நடத்தப்பட்டு அதன் புள்ளிகள் கணினியில் பதிவு செய்யப்பட்டு வருட இறுதிப் பரீட்சையின் புள்ளிகளுடன் இணைக்கப்படும்.
வருங்காலத்தில், ஒரு தவணைக்கு ஒரு செயல்நூல் என மூன்று தவணைகளுக்கான செயல்நூல்கள் மூன்று பகுதிகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, தினமும் பாடசாலைக்கு சமுகமளிப்பதும் வகுப்பறையில் செயல்படுவதும் கட்டாயமாக்கப்படும்.
பிரத்தியேக வகுப்பு அல்லது மேலதிகவகுப்புகளுக்கு செல்ல வேண் டிய அவசியம் மாணவர்களுக்கு இருக்காது.
இதனால் பிள்ளைகளை தேவையற்ற போட்டிகளுக்காக தனியார் வகுப்பு களுக்கு அனுப்பி ஆயிரக் கணக்கில் பணத்தை செலவு செய்யத் தேவையில்லை.
தனியார் வகுப்புகளுக்கு செலவு செய்யும் பணத்தைப் பெற்றோர், பிள்ளைகளின் உணவுக்கு செலவு செய்யலாம்.
இதனால் இலவசக் கல்வியின் நோக்கம் பூர்த்தி செய்யப்படும். அத்துடன், இந்த முறையால் மாணவர்களின் புத்தகப்பை சுமையைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ஜெயவர்தனபுரவில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.