ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் இணைந்தால் நல்லம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
இது குறித்து ரணிலும் சஜித்தும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் வானொலியொன்றில் ஒலிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் பழனி திகாம்பரம் எம்.பி. பங்கேற்றிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.