சுகாதார அமைச்சரைப் பாதுகாத்தே தீருவோம்! – ‘மொட்டு’ உறுதி

editor 2

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாக்கும் என அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கெஹலிய ரம்புக்வெலவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாத்தே தீரும். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரேரணை அரசின் பலத்தை இன்னொரு தடவை நிரூபித்துக் காட்ட நல்லதொரு சந்தர்ப்பமாகும்.” – என்றார்.

Share This Article