கொக்குவிலில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் சடலமாக மீட்பு!

editor 2

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியம் ஆலயத்துக்கு அருகில் இருந்தே குறித்த சடலம் நேற்று (01) இரவு மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆலயத்தின் வீதியில் உள்ள சனசமூக நிலையத்துக்கு அருகில் உள்ள அறையில் குறித்த வயோதிபர் தனிமையில் தங்கியிருந்துள்ளார். அவர் அந்த ஆலயத்தில் பணிபுரிந்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் வழமையான அவருடைய நடமாட்டம் இல்லாத நிலையில், அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share This Article