“இலங்கை மற்றும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையை ஊக்குவிப்பதற்காக திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான தரை மார்க்கமான பிரவேசத்தை விரிவாக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பை உருவாக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்லாயிரம் ஆண்டுகால உறவை மேலும் அபிவிருத்தி செய்தல். இவ்வாறான தொடர்பை உருவாக்குவது குறித்ததான ஆய்வு வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்.”
– இவ்வாறு இந்திய – இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளினாலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.