வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற அரசு நடவடிக்கை!

editor 2

இலங்கையில் தவறான வழியில் சம்பாதித்து அல்லது திருடி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் இலங்கையர்களின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரால் தவறான வழியில் சம்பாதிக்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் இருக்கின்றன என்றும், அவற்றை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வந்து அரசுடமையாக்குவதற்காகப் புதிய சட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சம்பாதிக்கப்பட்ட அதிகமான சொத்துக்கள் டுபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ளன என்றும், அவற்றைப் புதிய சட்டம் மூலம் இலங்கைக்குக் கொண்டுவர முடியும் என்றும் அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

Share This Article