போலி சாரதி அனுமதிப்பத்திரத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினமும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
விசாரணை பிரிவினரால் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை போலிச் சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் இருவர் கைதாகினார்.
இதனை அடுத்து மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு, பொலிஸார் தகவல் வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போலிச் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்க வந்த தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவர் கைதாகினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் யாழ். போதனாவைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரும் இன்னொருவருமாக இருவர் போலிச் சாரதி அனுமதி பத்திரத்துடன் கைதாகினார்.
முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் குறைந்தது 60 பேர் வரையாவது போலிச்சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று உள்ளமை தெரிய வந்துள்ளது.
மாவட்ட செயலகத்தில் நடைபெறும் எழுத்துப் பரீட்சைக்கு இரண்டு தடவைகள் தோற்றியும், சித்தியடைய முடியாதவர்களை இலக்கு வைத்து மாவட்ட செயலகத்துக்கு அருகில் உள்ள முகவர்கள் ஊடாகவே போலிச் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விவாகரத்துடன் தொடர் புடையவர்களை முழுமையாககைது செய்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மேலதிக விசாரணை தொடர்வதற்கும் யாழ்.மாவட்ட செயலகத்தினரின் ஒத்துழைப்புடன் மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்களுடன் விசாரணை முன்னெடுக்கவும்பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.