வடக்கு – கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ரணில் இன்று பேச்சு!

editor 2

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மாலை 3 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை, இன்றைய கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. 

Share This Article