“இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் எதெற்கெடுத்தாலும் சர்வதேச சமூகம் – வெள்ளையர்கள் காப்பாற்றவேண்டும் என்ற மனோநிலை உள்ளது. சர்வதேச சமூகத்துக்கும் சில வரையறைகள் உள்ளன என்பதை உணரவேண்டும்.”
– இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துதார்.
தமிழ்க் கட்சித்தலைவர்களுடன் நேற்று மதியம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்த பின்னர் அமெரிக்கா ஆக்கபூர்வமான நிலைப்பாடுகளை எடுத்தது. அது தொடரவேண்டும். இன்னும் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கவேண்டும்’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
“சர்வதேச சமூகத்திடமிருந்து அதிகளவில் எதிர்பார்க்க முடியாது. எல்லாவற்றையும் செய்ய முடியாது. சர்வதேச சமூகத்துக்கும் வரையறை உண்டு” என்று அமெரிக்கத் தூதுவர் பதிலளித்தார்.
அத்துடன் இலங்கையில் வடக்கில் மாத்திரமல்லாது தெற்கிலும் சர்வதேச சமூகமே உதவ வேண்டும் என்ற மனோநிலை காணப்படுவதை தான் அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.