கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் அகியனவற்றின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நூற்றுக்கு 10 வீதத்தால் விலையைக் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
தற்போது கொத்து ரொட்டியானது 500 ரூபா முதல் 1300 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் ப்ரைட் ரைஸ் 350 ரூபா முதல் 1900 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம் சாதம் 250 ரூபா முதல் 430 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
எவ்வாறாயினும் பசும்பால் மற்றும் பால்மா கலவையுடனான தேநீர் மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.