முல்லைத்தீவில் மனிதப் புதைகுழி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

editor 2

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியில் எதிர்வரும் 6ஆம் திகதி அகழ்வுப்  பணிகளை முன்னனெடுக்க முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தினம் வரையில், மனித எச்சங்கள் அழிவடையாமல் பாதுகாக்கப் பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் நீர் இணைப்பை மேற்கொள்வதற்காக நேற்றுமுன்தினம் மாலை கனரக இயந்திரம் கொண்டு நிலத்தைத் தோண்டியபோது மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன.

இதையடுத்து, கொக்கிளாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இது தொடர்பாக நேற்று முற்பகல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதையடுத்து அவர் குறித்த உத்தரவுகளைப் பிறப்பித்ததார்.

பெண்களின் உள்ளாடைகள், பச்சை நிறச் சீருடைகள் மற்றும் மனித எச்சங்கள் என்பன குறித்த புதைகுழியில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article