இராஜாங்க அமைச்சரின் வீடு மீது தாக்குதல்!

editor 2

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவுக்குச் சொந்தமான இரண்டு மாடி வீடு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சரச்சந்திர டயஸ் மாவத்தை, கோனவில, பமுனுவில என்ற முகவரில் அமைந்துள்ள அமைச்சரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் வீட்டின் எட்டு ஜன்னல்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலின் போது வீட்டில் எவரும் இருந்திருக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share This Article