மன்னார் மாவட்டம் நானாட்டான் – அச்சங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட இருவர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
காதல் விவகாரம் ஒன்றினால் சகோதரன் தாக்கப்பட்ட நிலையில் நீதி கேட்டுச் சென்ற மூத்த சகோதரனே படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர் ஒரு குழந்தையின் தந்தை என்று தெரிவிக்கப்படுகிறது.