மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது!

editor 2

இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாதது குறி;த்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 53வது அமர்வில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது கவலையை வெளியிடவுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 53வது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ளது ஜூலை 14 வரை இந்த அமர்வு இடம்பெறும்.

இலங்கை குறித்து வாய்மொழிஅறிக்கையொன்றை வெளியிடவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாதது குறித்து தனது அதிருப்தியை வெளியிடுவார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்திற்கு அனுசரனை வழங்கிய நாடுகள் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடவுள்ளன என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் இந்த அறிக்கையில் இலங்கையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் தன்னிச்சையாக கைதுசெய்யப்பட்டமை யுத்த குற்றம் மற்றும் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலில் ஈடுபடுத்துவது விடயங்களில் முன்னேற்றம் இன்மை விடயங்களில் முன்னேற்றம் இன்மை குறித்தும் குறிப்பிடப்படும் என தெரிவித்துள்ளன.

Share This Article