இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதாந்தச் செலவு 76,124 ரூபா!

editor 2

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான சமீபத்திய அறிக்கைகளின்படி, இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு இவ்வருடம் 76,124 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்தார்.


கணக்கெடுப்புத் தரவுகளின்படி, கடந்த வருடம் இலங்கை யில் ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவு சுமார் 63 ஆயிரத்து 820 ரூபாவாகும் என அவர் கூறினார்.


இலங்கை குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவில் 53 வீதம் அதாவது 40 ஆயிரத்து 632 ரூபா உணவுக்காக செலவிடப்பட வேண்டியுள்ளது. மீதமுள்ள 35 ஆயிரத்து 492 ரூபாய் உணவு அல்லாத தேவைகளுக்கா செலவிடப்படுகிறது என்று பேராசிரியர் கூறினார்.


இதேவேளை, இலங்கையில் 60 வீதமான குடும்பங்களின் மாதாந்த வருமானம் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் குறைந்துள்ளதாக அத்துக்கோரள தெரிவித்தார்.


இலங்கை குடும்பங்களின் உணவு அல்லாத தேவைக ளுக்காக செலவிடப்படும் பணத்தின் பெரும்பகுதி கடனை மீளச் செலுத்துவதற்கு செலவிடவேண்டியுள்ளதாகவும், இது உணவு அல்லாத செலவினங்களில் 23 வீதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், உணவு அல்லாத தேவைகளுக்காக செலவிடப் படும் பணத்தில் 14 வீதம் கல்விக்காகவும், 15 வீதம் மருத் துவம் மற்றும் சுகாதாரத்துக்காகவும், 13 வீதம் எரிபொருளுக்காகவும், 10 வீதம் ஆடைகளுக்காகவும், 6 வீதம் போக்கு வரத்துச் செலவுகளுக்காகவும் ஒதுக்கப்படுவதாக வசந்த அத்துக்கோரள தெரிவித்தார்.


இந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையின் பொருளாதாரம் 11.5மூ எதிர்மறையாக இருந்தது.


இதன் காரணமாகவே இந்த பணவீக்க நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share This Article