நாடாளுமன்றத்தில் ஒளி – ஒலிபரப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 33 ஊடக நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் 6 மாதங்களுக்குள் இரத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு இரத்தானால் புதிய அனுமதிப் பத்திரத்தைப் பெற வேண்டும் என்றும், அப்படி புதிய அனுமதிப் பத்திரத்தை வழங்குவதா, இல்லையா என்று ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐவர் கொண்ட ஆணைக்குழுவே தீர்மானிக்கும் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், ஊடகவியலாளர்களைச் சிறை அனுப்புவதற்கும், ஊடக நிறுவனங்களில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் இந்தச் சட்டமூலம் வழிவகுக்கும் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.