எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமது கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
மொட்டுக் கட்சி உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடாகும் எனவும், தனிப்பட்ட நபர்கள் வெளியிடும் கருத்துகள் கட்சியின் நிலைப்பாடு அல்ல எனவும் சாகர குறிப்பிட்டார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான செஹான் சேமசிங்க விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மொட்டுக் கட்சி செயலாளர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், மொட்டுக் கட்சியினர் அமைச்சு ப் தவி கேட்டு அலையப்போவதில்லை எனவும், அமைச்சுப் பதவி கிடைக்காததால் மாவட்ட தலைவர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர் எனவும் சாகர காரியவசம் தெரிவித்தார்.